சென்னை: வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள். கடைசியில் போன மாதம்தான் அதற்குப் பெயர் வலை என்று டிசைனை வெளியிட்டார் விஷ்ணுவர்தன். இப்போது அதற்கடுத்த படத்துக்கான தலைப்பு குறித்த செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இந்தப் படத்தை சிறுத்தை படம் தந்த சிவா இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் புதிய படத்துக்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்துக்கும் இந்தத் தலைப்பு பிடித்துவிட்டதாம். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
Sunday, 24 March 2013
ஈழத் தமிழருக்கான மாணவர்கள் போராட்டம்- மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பா?
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெறுவதால் மூடப்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறக்கப்படுமா? அல்லது ஏப்ரல் 1-ந் தேதி திறக்கப்படுமா? என்பது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை, போர்க்குற்றம் என பிரகடனம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆனால் மாணவர்கள் போராட்டம் முன்னைவிட தீவிரமானது.
இந்நிலையில் மூடப்பட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் நாளை திறக்கப்படும் என்ற செய்தி வெளியானது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்படுவது பற்றி அரசுத் தரப்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அனேகமாக இம் மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டு ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது
இந்நிலையில் மூடப்பட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் நாளை திறக்கப்படும் என்ற செய்தி வெளியானது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்படுவது பற்றி அரசுத் தரப்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அனேகமாக இம் மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டு ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது
Subscribe to:
Comments (Atom)
