Sunday, 24 March 2013

அஜீத்தின் புதிய படம் தலைப்பு 'வெற்றி கொண்டான்?' Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/03/ajith-next-vetri-kondan-172038.html

சென்னை: வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள். கடைசியில் போன மாதம்தான் அதற்குப் பெயர் வலை என்று டிசைனை வெளியிட்டார் விஷ்ணுவர்தன். இப்போது அதற்கடுத்த படத்துக்கான தலைப்பு குறித்த செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இந்தப் படத்தை சிறுத்தை படம் தந்த சிவா இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் புதிய படத்துக்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்துக்கும் இந்தத் தலைப்பு பிடித்துவிட்டதாம். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment